மொழி : English / தமிழ்

ஆரோக்கிய குறிப்புக்கள் அவர் கூற்றிலிருந்தும், அவர் குறித்து அறிந்தவர்கள் கூறியவற்றிலிருந்தும், தொகுக்கப்பெற்றவை.


சுவாமிகள் அருளிய ஆரோக்கிய குறிப்புகள்
சளி கட்டுவது நீங்க
முருங்கை பூ, மூன்று பூண்டு பல்லு, மிளகு சிறிதளவு கற்பூரம் சேர்த்து அரைத்து சாப்பிடவும்.
கோமக்கோனை கட்டி
கும்னா செடியின் வேர்பட்டையைக் கொண்டு வந்து சுத்தம் செய்து தூள் செய்யவும். ஒரு படி எள்ளு மாவும் ஐந்து பெரிய பனைவெல்ல கட்டி எல்லாவற்றையும் இடித்து ஆறு உருண்டைகளாக செய்து ஒரு உருண்டையை தர்மம் செய்யவும், மீதி உருண்டையை தினம் ஒன்று சாப்பிடவும்.
கர்ப்ப கோளாறு
அருகம்புல் அரைத்து பாலில் கொடுக்கவேண்டும்.
இளம்பிள்ளைவாதம் பிள்ளைகளுக்கு வராமல் தடுக்க
கர்ப்பிணிக்கு தனியா அதிகமாகவும், மோடி குச்சி, மிளகு, சீரகம், சுக்கு வறுத்து இடித்து சலித்து தழுதாளி இலையை எள் எண்ணையில் வதக்கி பூண்டு வைத்து ஆட்டி கடுகு போட்டு தாளித்து ஊறுகாய் போல் உபயோகித்து வரவேண்டும்.
கைக்குழந்தைக்கு கபம்,சளி நீங்க
குப்பை மேனி இலை, துளசி இலை ஆவி கட்டி சாரு எடுத்து அதில் நான்கு சொட்டு தேன் விட்டு பாலாடையில் தினமும் காலை கொடுத்தால் கபம், சளி மூன்று மாத குழந்தைகளுக்கு விலகும்.
குழந்தை மாந்தத்திற்கு
கல்யாணமுருங்கை கொழுந்து வெள்ளை வேலம் பட்டை, உதயங் கொழுந்து இவைகளை சம அளவு சேர்த்து அரைத்து பாலில் ஒரு தேக்கரண்டி ஆறு மாதம் வரை கொடுக்கலாம். ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைக்கு இரண்டு அவுன்ஸ் கொடுக்கலாம்.
பாகற்காய் இலையின் சாற்றை சனிக்கிழமை அன்று பாலாடையில் ஊற்றி குழந்தைகளுக்கு கொடுத்தால் நீங்கும்.
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் நீங்க
உத்தாமணிசாறு, வேப்பம் எண்ணை சேர்த்து இரண்டு பூண்டு பள்ளு போட்டு காய்ச்சி கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும்.
காக்காய் வலி
உத்தாமணி சாறு, வேப்பம் எண்ணை, பூனை காய்ச்சல் பட்டை தூள் கலந்து காய்ச்சி மாதத்திற்கு மூன்று நாள் வீதம் மூன்று அமாவாசை கொடுக்கவும்.
காதில் குடு குடு என்ற சப்தம் கேட்பது, பேசுவது கேட்காமல் இருப்பது விலக
தேங்காய் எண்ணை, வெள்ளை வேளை கீரை, நாயுருவி வேர், பொரித்த பெருங்காய நைஸ்தூள், பூண்டு பள்ளு, சிறிது கற்பூரம் இவைகளை எரித்து சூடு தாங்கும் அளவு காதில் ஊற்றி வரவும்.
காது அடைப்பு விலக
வெள்ளை வேளைக்கீரை வேர், சிறுகுருஞ்சா நாயுருவி வேர், பெருங்காயம், கற்பூரம் சேர்த்து தேங்காய் எண்ணையில் எரிக்கவும். எல்லாவற்றையும் பொடி செய்து கடைசியில் கற்பூரம் சேர்க்கவும். காது சூடுதாங்கும் வரை காதில் ஊற்றவும்.
கால் கை விழுந்ததற்கு
தாம்பூலத்தில் தங்க பஸ்பம், அரிசி, எடை வைத்து மூன்று வேளையும் கொடுத்தால் குணமாகும்.
காசம் ( TB ), படை, மூலச்சூடு நீங்க
நிலகடம்பையுடன் மிளகையும் சேர்த்து அரைத்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் நீங்கும்.
கண்டங்கத்தரிக்காயை வெள்ளாட்டு கோமியத்தில் ஊறவைத்து மறுபடியும் காயவைத்து வறுத்து தூள் செய்து தேய்க்கவும். காசத்திற்கு உள்ளுக்கு சாப்பிடவும்.
கால்களில் உள்ள ஆணி விலக
கீழாநெல்லியை அரைத்து பாதத்தில் தேய்த்து இரவு அப்படியே கட்டிவிட வேண்டும். பத்து நாட்கள் தொடர்ந்து செய்தால் ஆணி வெளியே வரும்.
காதுகளில் சீழ் வருவது நிற்க
தேள்கொடுக்கு இலையையும், பூண்டையும் சேர்த்து சாறு எடுத்து எள் எண்ணையில் காய்ச்சி அதை தினம் ஒரு வேளை மூன்று நாட்கள் காதில் ஊற்றவும். 15 நாட்கள் விட்டு மறுபடியும் போடவும். பிறகு தேள்கொடுக்கு இலையையும், பூண்டையும் சேர்த்து சாறு எடுத்து தேங்காய் எண்ணையில் காய்ச்சி அதை தினம் ஒரு வேளை மூன்று நாட்கள் காதில் ஊற்றவும். இது போல் காது சுத்தம் ஆகும் வரை போடவும்.
கண் நன்றாக தெரிய
கரிசலாங்கண்ணி சாப்பிடவேண்டும். கீழாநெல்லி செடியை பிடுங்கி சீரகத்துடன் அரைத்து சாப்பிட்டால் கண் நன்றாக தெரியும்.
கக்கூஸ் படை
ஆடுதின்னாபாளை, நெல்லிக்காய் கந்தகம் சம எடை எரித்து தேங்காய் எண்ணையில் சேர்த்து தடவினால் குணமாகும்.
கண் சிகப்பாக இருப்பது & நீர் வடிதல் நிற்க
அடுக்கு நந்தியாவட்டை பூவை பாலில் ஊற வைத்து, ஊறின பாலை கண்ணில் ஊற்றினால் கண்ணீர் வருவது நிற்கும்.
கண் பார்வை பெற
கீழாநெல்லியையும், சீரகமும் அரைத்து லேகியம் செய்து சாப்பிடவேண்டும்.
கண்வலி விலக
பிரம்மதண்டியின் மஞ்சள் நிறமான பாலை மூன்று நாட்கள் போடவும்.
ரத்தம் சுத்தியாக
சின்ன வெங்காயம் ( சாம்பார் வெங்காயம் ) சாப்பிட ரத்தம் சுத்தியாகும்.
தலைவலி குணமாக
ஒன்றரை கிலோ மிளகு வாங்கி தலையணை போல் தைத்து ஒரு மாதம் அதில் தலைவைத்து படுக்க தலைவலி குறையும். தலையில் உள்ள நீரை எல்லாம் மிளகு உறிஞ்சிவிடும். தலைவலி முற்றும் குணமாகும்.
நரம்பு தளர்ச்சி நீங்க
கல் சுண்ணாம்பு ஒரு மண் காலத்தில் போட்டு தெளிந்த நீரை எடுத்து அதில் ரசமணியை போட்டு பின் நீரை மட்டும் குடிக்கவும்.
இருதயத்தில் ஓட்டை இருந்தால்
சிதிரமூலக்குச்சி உடன் கடை சரக்கு செலவுகளையும் சேர்த்து ரசம் போல் வைத்து சாப்பிடவும் அல்லது தட்டி கஷாயம் போல் சாப்பிட்டு வரவும்.
முருங்கை கொழுந்தை வேகவைத்து சாறு எடுத்து உள்ளுக்கு சாப்பிட்டால் இருதயத்தில் உள்ள சதை வளர்ந்து துவாரத்தை மூடிக்கொள்ளும்.
இடுப்பு எலும்பு தேய்ந்து இடுப்பு வலி
மூங்கில் தழை சாறு இருமடங்கு, எள் எண்ணை ஒரு மடங்கு சேர்த்து எரித்து நூலில் தொட்டு எரித்தால் சிடு சிடு என்ற சப்தம் வரக்கூடாத பக்குவ நிலை வரவேண்டும். காலையில் உள்ளங்கை அளவு சாப்பிடவேண்டும். புழுங்கல் அரிசியுடன் உளுத்தம் பருப்பும் சேர்த்து வறுத்து பவுடர் ஆக்கி மிளகு பூண்டு பள்ளு சேர்த்து புட்டுபோல் ஆவிகட்டி அதை ஒத்தடம் கொடுக்க வேண்டும் அந்த புழுங்கல் அரிசி புட்டையும் சாப்பிடவேண்டும். எல்லா எலும்பு வலிக்கும் இதை செய்யலாம் குணமாகும்.
எலி கடி
ஆகாசத்தாமரை இலையை எள் எண்ணையில் எரித்து காலையில் சாப்பிட்டு கடிவாயில் தேய்க்கவும். உப்பு இல்லாத பத்தியம்.
எருக்கன் பால் கடித்த இடத்தில் தேய்க்கலாம்.
ஊமையை மெல்லமெல்ல பேச வைக்க
கீழாநெல்லி தழையை அரைத்து தலையில் தேய்த்து அயக்காந்த செந்தூரம் அரிசி எடை தேனில் கலந்தும், நாயுருவி தழையை பசும்பாலிலும் சாப்பிட்டு வர பேச்சு வரும்.
உடம்பு பலம் பெற
பருத்தி கொட்டை, வெள்ளை பூசணிக்காய் விதை, அருகம்புல் கிழங்கு இவைகளை நிழலில் காய வைத்து தூள் செய்து சாப்பிடவேண்டும்.
உடம்பு எரிச்சல் நீங்க
குப்பைமேனி தழையுடன் உப்பு மிளகு சேர்த்து அரைத்து உள்ளுக்கு சாப்பிட்டு எரிச்சல் இருக்கும் இடத்திலும் தேய்க்கலாம்.
தும்பை இலை சாற்றுடன் உப்பையும் சேர்த்து மேல் தடவி விட்டு குளித்தால் சீக்கிரம் போகும். ( எரிச்சல் தாங்கவேண்டும் )
நிலக்கடம்பையை அரைத்து மிளகுடன் சேர்த்து சாப்பிட்டு மேலுக்கும் தடவலாம்.
உடம்பு அசதி நீங்க
தூதுவேளை கீரையும் முருங்கை கீரையும் சேர்த்து அரைத்து சாப்பிடவும்.
இழுப்பு சீதபேதி
உத்தாமணி இலைச்சாறு வேப்ப எண்ணை இரண்டையும் சம எடை எடுத்து காய்ச்சி இரண்டு அவுன்ஸ் கொடுக்கவும்.
ரத்தம் சுத்தி செய்ய
அருகம்புல் வேரை அரைத்து பாலுடன் சாப்பிடவும்.
கேரட் சாப்பிட்டால் ரத்த சுத்தி விருத்தியாகும்.
இருமல் ஆஸ்த்மா
கருப்பு பூனைக்காய்ச்சல் இலையை பசும் நெய்யால் வதக்கி மிளகு லவங்கம் கிராம்பு மூன்றையும் இடித்து சர்க்கரை கலந்து சாப்பிடவும்.
இருமல் மார்வலி விலக
சிகப்பு பூனை காய்ச்சல் இலை, தூதுவேளை இலை இரண்டையும் வெயிலில் காய வைத்து தூள் செய்து தேனுடன் காலையில் சாப்பிடவும்.
இடுப்பு வலி நீங்க
தழுதாளி இலையை எள் எண்ணை விட்டு வதக்கி பூண்டுடன் அரைத்து துவையலாக சாப்பிடவும்.
மிளகை பொன்வறுவலாக வறுத்து எள் எண்ணையுடன் சேர்த்து சாப்பிடவும்.
கூழாங்கல் சின்ன கற்களை சுடு தண்ணீரில் போட்டு எடுத்து துணியில் வைத்து ஒத்தடம் கொடுக்கவும். வலியுள்ள பாகத்தில் எள் எண்ணை தடவி குண்டு மணி இலையை மேலே ஒட்டி வைக்கவும்.
வயிற்று புண் அப்பன்டிஸ்
வாழை தண்டை பச்சடி செய்து தயிருடன் நாற்பது நாட்கள் சாப்பிட்டால் அறுவை சிகிச்சையை தவிர்க்கலாம்.
ஆஸ்த்மா
உத்தாமணி சாறு வேப்ப எண்ணை சம அளவு எடுத்து காய்ச்சி காலை ஒருவேளை கொடுத்து விட்டு பிறகு சுட்ட சுண்ணாம்பு கற்களை பானையில் போட்டு தண்ணீர் ஊற்றி வைத்து தெளிந்த சுண்ணாம்பு நீரை ஒரு மண்டலம் ( 48 நாள் ) சாப்பிடவும்.
சிகப்பு பூனை காய்ச்சல் தழையை வறுத்து தூள் செய்து, மிளகையும் பொன் வறுவலாக வறுத்து தூள் செய்து இரண்டையும் சேர்த்து சாபிட்டால் நீங்கும்.
ஆஸ்த்மா இஸ்நோபியா விலக
அரிசி, திப்பலி பத்து கிராம் பொன் வறுவலாக வறுத்து தூள் செய்து அதனுடன் தூதுவேளை தழையை காய வைத்து இடித்து தூள் செய்து இரண்டையும் கலந்து தேனில் கொடுக்கவும்.
அக்கி
சிறுபசலை, சீம ஓடு தூள், உப்பு, மிளகாய் இவற்றுடன் மண் அல்லது செம்மண் போட்டு நன்கு அரைத்து நான்கு கோடுகள் போட்டு தெரிந்த விலாசத்திற்கு எழுதி ( ஓம் காகா பரா காகா மூவா காகா சுவா காகா குருவே துணை) மூன்று வேளையும் எழுதினால் போகும்.
அல்சர் வயிற்றில் புண் உள்ளது விலக
அம்மான் பச்சரிசி தழையை அரைத்து எலுமிச்சை பழம் அளவு பாலில் சாப்பிடவும். வலி குறையும் வரை சாப்பிடவும். புளி காரம் நீக்கவும்.
முட்டையாக கட்டி போல் இருப்பது கரைய
முட்டையாக கட்டி போல் இருப்பது கரைய சுண்ணாம்பும் தேனும் சேர்த்து போட்டால் உள்ளே அமுங்கிவிடும். உடைந்து விட வேண்டுமானால் அரசமரத்து பழுப்பு இலையை எரித்து தூள் செய்து தேங்காய் எண்ணையில் குழைத்து போட வேண்டும்.
வன்னி இலையை வறுத்து தேங்காய் எண்ணையில் எரித்து போட்டால் எப்பேர்பட்ட ரண காயமும் குணமாகும்.
சித்திரை மூல குச்சியை எருக்கன் பாலில் இழைத்து கட்டியின் மேல் போட்டால் பழுத்து உடைந்து விடும். சித்திரமூல வேர் ( கொடிவேலி என்று மற்றொரு பெயர் ) ( மருந்து கடையில் கிடைக்கும் 50 கிராம் வாங்கி ) எருக்கன் பால் விட்டு அரைத்து அந்த கட்டியின் மேல் போட்டு வந்தால் இளகி கட்டியில் சீழ் வருவது போல் இளகி வந்து அந்த திரவம் இருக்கும் அதை வெளியே அகற்றி விட்டால் கட்டி மறைந்து விடும்.
சங்கை எருக்கன் பாலில் ஊற வைத்து பிறகு பூசலாம்.
உத்தாமணி சாறு எடுத்து சுண்ணாம்பு கலந்து மஞ்சள் கொம்பால் தேய்த்து பத்து போடவும். மூன்று நாட்களில் உடையும்.
எலி கடிக்கு மருந்து
எலி கடித்தால் ஆகாசத்தாமரை இலையை நல்லெண்ணையில் போட்டு எரித்து ஐந்து நாட்கள் உப்பு புளி சேர்க்காமல் சாப்பிட குணமாகும்.
ராஜா எலி கடித்தால் பிளக் நோய் வரும்.
ஒற்றை தலைவலி நீங்க
படரும் தும்பை தழை, வேலை தழை, பூண்டு, கட்டி கற்பூரம், மிளகு அளவு பெருங்காயம் சேர்த்து கையால் கசக்கி வலிக்கும் பாகத்தின் எதிர் பக்கம் உள்ள காதில் நான்கு சொட்டு விடவும்.
வெள்ளை பூனைக்காய்ச்சல் இலையை வலி எடுக்கும் பாகத்தில் ஓட்ட வேண்டும் பிடித்து கொண்டால் விட்டு விட வேண்டும். விழுந்து விட்டால் நரம்பின் மேல் ஒவ்வொன்றாக மூன்று முறை செய்யவும்.
சேற்றுப்புண் விலக
ஒரு அம்மையாருக்கு காலில் சேற்றுப்புண் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அதற்கு சுவாமிகளிடம் மருந்து கேட்க அதற்கு சுவாமிகள் புளியை கரைத்து அத்துடன் மஞ்சள் தூளை அளவாக கரைத்து நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி குழம்பு போல் வரும். அக் குழம்பை சேற்றுப்புண் உள்ள இடத்தில் போட குணமாகும் என்றார்.
அந்த அம்மையாரும் சுவாமிகள் கூறியபடி செய்தார். மருந்து போடும் போது எரிச்சல் மிகுதியாக இருந்தது. இரு முறை போட்டதும் முற்றிலும் குணமானது.
சொறிசிரங்கு விலக
ஆமணக்கு எண்ணெய் எருக்கன் பால் சேர்த்து பனியில் காய வைத்து சொறி சிரங்கு மேல் தேய்க்கவும். பிரம்மதண்டி விதையை வறுத்து தூள் செய்து உடம்பில் தேய்க்கவும்.
கை வீக்கம்
தழுதாளி இலை, மிளகு சித்திரத்தை, சுக்கு, அரிசி கண்டம், திப்பிலி, பூண்டு, பரங்கிபட்டை இலைகளை கஷாயம் போட்டு தினம் இரண்டு வேளை சாப்பிடவும்.
கைகுடைச்சல்
அருகம்புல் வேரின் கிழங்கை அரைத்து பாலில் சேர்த்து சாப்பிடவும்.
காலில் கருப்பு படை
கண்டங் கத்தரிக்காயை இடித்து ஒன்றரை லிட்டர் தேங்காய் எண்ணையில் எரிக்கவும். சிறிது பூண்டு பற்களை போடவும். பூண்டு மொர மொர என்று இருந்தால் பதமானதாகிவிடும். நெல்லிக்காய் கந்தகம் பத்துகிராம் சேர்க்கவும். இந்தக் கலவையை படையின் மேல் தேய்த்து வரவும்.
காச நோய்
கண்டங் கத்தரிக்காயை இரண்டாக வெட்டி வெள்ளாட்டு மூத்திரத்தில் ஊற வைத்து உலர வைத்து இடித்து தூள் செய்து சாப்பிடவும்.
கேன்சர் கட்டி உடைய
உத்தாமணி சாற்றில் சுண்ணாம்பு விட்டு மஞ்சள் கொம்பால் இழைத்து கட்டியின் மேல் தடவினால் உடைந்துவிடும் அல்லது இழைத்ததை துணியில் தோய்த்து கட்டியின் மேலே போட்டு வரவும். பழுத்து கட்டி உடைந்து விடும்.
கெட்ட நீரினால் கட்டி இருந்தால்
கருநொச்சி தழையுடன் மிளகையும் சேர்த்து அரைத்து காலையில் கச்சக்காய் அளவு வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
பிரசவ காலத்தில் குழந்தை சுலபமாக பெற
சிற்றாமணக்கு எண்ணை இரண்டு சோடா பாட்டில் அளவு எடுத்துக்கொண்டு அதில் பேயன் வாழைபழத்தை துண்டு துண்டுகளாகி ஊற வைத்து வெயிலில் காய வைத்து ஜாடியுடன் சூரிய ஸ்புடம் போடவும். பிரசவகால பெண்கள் இரவு படுக்கும் முன் சிற்றாமணக்கு எண்ணையில் ஊறிய பேயன்பழ வாழைபழ துண்டை சாப்பிட்டு வந்தால் சூடு தணியும் சுலபமாக குழந்தையும் பிறக்கும்.
முருங்கை இலையை சாம்பாரில் போட்டு கொடுத்தால் சுக பிரசவாமாகும்.
சுகபிரசவம்
பூச நட்சத்திரத்தில் சிகப்பு நாயுருவி செடியை காப்பு கட்டி சுவாமிகளை மனதார நினைத்து 108 முறை ஓம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் துணை என்று ஜெபித்து மஞ்சள் தண்ணீர் தெளித்து பிடுங்கி வைத்து பிரசவமாகாமல் இருக்கும் பெண் உள்ள அறையில் ஈசான்யம் பக்கம் போட்டால் சுக பிரசவமாகும்.
பிரசவத்திற்கு
பிரசவ வலி வந்தவுடன் கீழாநெல்லி செடியை காப்பு கட்டி வேருடன் பிடுங்கி வலதுகால் சுண்டுவிரலில் கட்ட வேண்டும்.
இரண்டுமணி நேரம் கழித்து குழந்தை பிறக்கும் என்றால் யானை நெருஞ்சியை தண்ணீரில் போட்டால் கொழ கொழ என்றாகும் அந்த தண்ணீரை குடிக்க செய்யவும்.
தாயின் வயிற்றிலேயே இறந்த குழந்தையையும் அப்புற படுத்துவதற்கும் யானை நெருஞ்சியை தண்ணீரில் போட்டு சிறுக சிறுக ஒரு டம்பளர் நிறைய ஐந்து அல்லது ஆறு முறை கொடுத்தால் இறந்த குழந்தையும் நல்லபடியாக வெளியே வரும்.
யானைநேருஞ்சி - சிருகுறிஞ்சி வகையை சேர்ந்தது. யானை நெருஞ்சி இருக்குமிடத்தில் யானை வராது.
பிரசவ பாதை ஆரம்பித்தவுடன் மூன்றேமுக்கா நாழிகையிலே என்னை ஏன் பிறக்க வைத்தாய் என்று கடவுளை வேண்ட, உடம்பிலே உள்ள சூட்டை குறைத்தால் உடனே பிரசவமாகும். கணவன், மகள் இருந்தால் தாமதமாகும் தனியே விட்டுவிட்டால் ஐந்து நிமிடத்தில் தன்னைதானே மறந்தால் நரம்பை இழுத்து பிடித்திருப்பது விட்டுவிடும். நான்குமாதம் ஆன பிறகு கிராம்பு சாப்பிடவேண்டும், குங்குமப்பூ கொஞ்சமாக கொடுக்கவும்.
கர்ப்பஸ்திரி
போட்டது போட்டபடி குழந்தை இருக்கும். குழந்தை முட்டும்.
சங்கத்தழையை எள் எண்ணையில் வதக்கி சாப்பிட்டால் கைகுத்தல் குடைச்சல் நீங்கும்.
தனியா, சுக்கு வறுத்து பனைவெல்லம் சேர்த்து சாப்பிடவும். (சூடும் குளிமையும் இல்லாத பொருள் பனைவெல்லம்) இரவு படுக்கும் போது கொதிக்கும் பாலில் குங்குமப்பூவை போட்டு மஞ்சளாக பால் மாறிய பின் ஆற்றி சாப்பிடவும்.